விவசாயிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கொலைகாரர்களாக சித்தரிக்கக் கூடாது என்று, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடர்பாக மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்தியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் “ ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக திருவாரூரிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அவ்வாறு டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தமிழக அரசு கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்திருப்பது என்பது தமிழக அரசின் விவசாயிகளை கொலைக்காரர்களாக சித்தரிக்கும் போக்கு. தமிழக முதலமைச்சர் திட்டமிட்டு விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் உள்ள உறவை சீர்குலைக்கும் முயற்சிதான் இது, இந்த போக்கை தமிழக அரசு கைவிடவேண்டும்” என்று தெரிவித்தார்
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்