[X] Close

"யுவராஜ் சிங் 21 நாள்கள் பயிற்சி கொடுத்தார்" - சுப்மன் கில்

விளையாட்டு

Camp-with-Yuvraj-Singh-was-very-useful-says-Shubman-Gill

ஐபிஎல் தொடருக்கு முன்பாக யுவராஜ் சிங் கொடுத்த பயிற்சி உபயோகமாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.


Advertisement

காபாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 91 ரன்களை குவித்தார். சுப்மன் கில்லின் 91 ரன்கள் இந்திய அணி வெற்றிப்பெற பெரிதும் உதவியது. இந்தியா போட்டியை வென்றதுடன் மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் விளையாடிய 21 வயதான சுப்மன் கில் 259 ரன்களை சேர்த்தார்.

image


Advertisement

இது குறித்து பேசியுள்ள சுப்மன் கில் "இப்போது நான் இலகுவாக உணர்கிறேன். இந்தியாவுக்காக முதல் போட்டியில் ஆடப்போகிறேன் என்ற பதற்றம் இப்போது இல்லை. முதலில் பேட் செய்யும்போது கொஞ்சம் பதற்றமடைந்தாலும் அதன் பின்பு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. சதம் அடித்திருந்தால் அது கேக் மேலே வைக்கப்பட்டிருக்கும் செரி பழம்போல இருந்திருக்கும். ஆனால் அணியின் வெற்றிக்கு பங்காற்றி இருக்கிறோம் என்பதே இப்போது என்னுடைய மகிழ்ச்சி" என்றார்.

மேலும் பேசிய அவர் "என்னுடைய அடுத்தக்கட்டம் தொடர்ந்து சீரான விகிதத்தில் விளையாடுவது. அடுத்த வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும். ஆனால் அதற்கு தயாராக இருக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலிய தொடர் எனக்கு நல்ல படிப்பினையை கொடுத்தது" என்றார் சுப்மன் கில்.

image


Advertisement

தொடர்ந்து பேசிய சுப்மன் கில் "ஐபிஎல் தொடருக்கு முன்பாக 21 நாள்கள் யுவராஜ் சிங் நடத்திய பயிற்சிக்கு சென்றேன். அவர் எனக்கு நூற்றுக் கணக்கான பவுன்சர் பந்துகளை வீசி எனக்கு பேட்டிங் பயிற்சிகளை கொடுத்தார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்றார்.


Advertisement

Advertisement
[X] Close