குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. பலவீனமாக இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி நகரில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் நகருக்கு அருகே உள்ள கிராமத்தில் உயிரிழந்துள்ளனர். 20 பேருக்கும் அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பெட்ரின்ஜா நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். குரோஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வரை உணரப்பட்டது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?