மதுரவாயலில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் பழிக்கு பழி வாங்க கள்ளக் காதலனின் மனைவியின் மோட்டார் சைக்கிளை எரிக்க முயன்றபோது 6 மோட்டார் சைக்கிள்களை எரித்த கள்ளக்காதலியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 6 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோட்டார் சைக்கிள் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.
மேலும் அந்தப் பெண் அந்த வீட்டில் வசித்து வரும் பழனிபாபு குமாருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பழனிபாபு குமாரிடம் விசாரணை மேற்கொண்ட போது கார், மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்யும் இவர், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது.
இந்த உறவால் திவ்யாவிற்கும், பழனிபாபு குமாரின் மனைவி அமுதாவிற்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமுதாவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதற்காக நேற்று இரவு அமுதாவின் மோட்டார் சைக்கிளை திவ்யா தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது.
இதையடுத்து, திவ்யாவை மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். காதலனின் மனைவியை பழிவாங்க அவரது மோட்டார் சைக்கிளை எரிக்க முயற்சி செய்தபோது 6 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி