[X] Close

வாடகைதாரர்கள் பிரச்னைகளை விசாரிக்க ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை

TN-assembly-session-held-by-Edappadi-Palanisamy

 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வீடு வாடகைக்கு எடுத்து குடியிருக்கும் வாடகைதாரர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை விசாரிக்க புதிதாக ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Advertisement

மேலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளை மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றுவதில் தவறு இல்லை என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகளாக மாற்றப்பட்டால், சாலையோரங்களில் மூடப்பட்ட 2000 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close