இந்தியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வல் அதிரடியாக ஆடியது குறித்து அதிர்ச்சி தெரிவித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 374 ரன்களையும், 2 ஆவது ஒருநாள் போட்டியில் 389 ரன்களையும் குவித்தது. இந்த இரண்டுப் போட்டியிலும் இந்தியா 300 ரன்களுக்கு மேல் அடித்தாலும் இறுதியில் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைதான் தழுவியது. இதில் முதல் போட்டியில் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களும், 2ஆவது போட்டியில் 29 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் மேக்ஸ்வெல். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பஞ்சாப் ரசிகர்களுக்கு மேக்ஸ்வெல்லின் ஆட்டம் ஐபிஎல்லில் மோசமாகவே இருந்தது. அந்தத் தொடரில் மொத்தம் 108 ரன்களையே மேக்ஸ்வெல் அடித்தார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஆடிய விதம், இது மேக்ஸ்வெல் தானா என்று கேட்கும்படி அவ்வளவு மோசமாக கடந்த ஐபிஎல் சீசனில் இருந்தது. அவரது மோசமாக ஆட்டத்தால் பஞ்சாப் அணி சில தோல்விகளையும் கண்டது.
ஆனால், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் ரசிகர்களை நோகடித்த மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பழைய பார்முக்கு திரும்பி சிக்ஸர் மழை பொழிந்து ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வேடிக்கையான மீமை ஷேர் செய்திருந்தார் பஞ்சாப் வீரர் ஜிம்மி நீஷம். அதில், பஞ்சாப் அணிக்காக மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல், ஜிம்மி நிஷம் குறித்து கே.எல்.ராகுல் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவது போன்ற மீம்ஸ் அது.
அதற்கு பதிலளித்த மேக்ஸ்வெல் "நான் கே எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்" என வேடிக்கையாக தெரிவித்தார். மேக்ஸ்வெல் வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு அவரது சொதப்பல் ஆட்டம் இருந்தது.
.@Gmaxi_32 #AusvInd pic.twitter.com/XG2ZHSXNA8 — Wasim Jaffer (@WasimJaffer14) November 29, 2020
இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் மேக்ஸ்வெல் அதிரடி காட்டியிருந்தார். மேக்ஸ்வெல்லின் நேற்றைய ஆட்டத்தை பார்த்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் "இது ஒரு குற்றம்" என வேடிக்கையான மீமை பகிர்ந்திருந்தார். அந்த மீமில் பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.
உண்மையில், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் இருவரும் ஐபிஎல் தொடரின்போது மிகப் பொறுமையாக விளையாடிவிட்டு, தங்கள் நாட்டு அணிக்காக விளையாடும்போது ஆக்ரோஷமாக விளையாடி இந்திய பந்துவீச்சை புரட்டி எடுக்கின்றனர். இது இந்திய ரசிகர்களை குறிப்பாக ஐபிஎல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்