Published : 28,Nov 2020 01:54 PM

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்தியக்குழு தமிழகம் வருகை

Central-team-comes-to-visit-Nivar-cyclone-affected-areas-in-TN

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய வரும் திங்கள்கிழமை மத்தியக் குழு தமிழகம் வருகிறது.

கடந்த 25ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கிய நிவர் புயல் கடலூர் உட்பட பல மாவட்டங்களில் விவசாய நிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மறுநாளே தமிழக முதல்வர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டிருந்தார்.

புயல் குறித்து முதல்வரைத் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து, நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய வரும் திங்கள்கிழமை மத்தியக் குழு தமிழகம் வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலிலும் மத்திய குழு ஆய்வு நடத்தவுள்ளது.

image

இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.25, 26ஆம் தேதிகளில் இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் பெருமளவில் இருப்பதால், மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேவையான உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்