இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படம் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. ரேவதி, ரகுவரன், பிரபு உள்ளிடோர் நடித்திருந்தாலும் அஞ்சலி படத்தில ஆசம் சொல்ல வைத்தது பேபி ஷாமிலியின் நடிப்புதான்.
சுருட்டை முடியுடன் கூடியத் தலைமுடியை எப்போதும் விரித்துப் போட்டப்படி சிறப்புக் குழந்தையாக நடித்த பேபி ஷாமிலியை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்.
அப்படியே அள்ளிக் கொஞ்சத்தூண்டும் பேரழகுக் குழந்தையாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் மணிரத்னம். இப்படத்தில் நடித்ததற்காக பேபி ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, சிறந்த வட்டார மொழி திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்டப் பிரிவுகளிலும் இப்படம் மூன்று தேசிய விருதுகளை குவித்தது. இவ்வளவு வெற்றியடைய முக்கிய காரணம், ’அஞ்சலி அஞ்சலி’ பாடல்தான். குட்டி ஏஞ்சலாக நடித்த பேபி ஷாமிலி வளந்துவிட்டாலும், இப்போதும் 80 ஸ் கிட்ஸ்களின் செல்லக் குழந்தைதான்.
இந்நிலையில், அஞ்சலி படத்தில் பேபி ஷாம்லியை ஜெராக்ஸ் எடுத்ததுபோல் இருக்கும் அல்லு அர்ஜுன் மகள் அர்ஹா இன்று தனது 4 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் மகளுடன் விளையாடும் வீடியோவை அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் அல்லு அர்ஜுன் இன்று ரசிகர்களுக்கு மகளின் ஸ்வீட் சர்ப்ரைஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கில் வெளியான அஞ்சலி அஞ்சலி பாடலுக்கு, அதே வெள்ளைநிற ஆடையில் பேபி ஷாம்லிக்கு பதில் குட்டி ஏஞ்சலாக காட்சியளிக்கிறார் அல்லு அர்ஹா.
அப்பாடலில் வரும் குழந்தைகள் போலவே இதிலும் குழந்தைகளோடு விளையாடி க்யூட் எக்ஸ்பிரஷன்களால் நம் மனதை கொள்ளைக்கொள்கிறார்.
பாடலின் இறுதியில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் இயக்குநர் மணிரத்னத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் நன்றி சொல்லியிருக்கிறார்.
Loading More post
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்