அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். வரும் ஜனவரி 5 ஆம் தேதிமுதல் எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.1500 கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட ஆயத்தப்பணிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி விட்டார்.
அதன்படி இன்று திருக்குவளையில் முதல் பிரச்சாரத்தை உதயநிதி தொடங்கினார். அப்போது மேடையில் ஏறினால் கைது செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்துகொள்ளுங்கள் என அவர் மேடையில் ஏறி பிரசாரத்தை ஆரம்பித்தார். பின்னர், அங்கு பேசிவிட்டு கீழே இறங்கும்போது போலீசார் உதயநிதியை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, கைது செய்தாலும் பிரசாரத்தை தொடருவோம் எனத் தெரிவித்தார்.
அடிமை அதிமுக-பாசிச பாஜகவுக்கு எதிராக மொத்த தமிழகமும் உள்ளது. அந்த உணர்வை ஒன்றுபட்டு ஒருங்கிணைக்க 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணத்தை திருக்குவளையில் இன்று தொடங்கினேன்.அதை முடக்க நினைத்து கைது செய்கின்றனர். எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம்-தமிழகம் மீட்போம்! pic.twitter.com/iyRAviMVkJ — Udhay (@Udhaystalin) November 20, 2020
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!