Published : 11,Jul 2017 02:54 AM

திலீப் கைது: 8 படங்களுக்கு சிக்கல், தயாரிப்பாளர்கள் தவிப்பு!

dileeps-new-releases-gets-problem

நடிகை பாவனா வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நடித்து வெளியாவதாக இருந்த படங்களுக்கும் நடிக்க இருந்த படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, பாவனா கடத்தப்பட்டார். காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். அடுத்த சில நாட்களில் அந்த கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நடித்து, 21-ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த ’ராம லீலா’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. அருண் கோபி இயக்கி இருந்த இந்தப் படம் மெகா பட்ஜெட் படம். 
‘கைது சம்பவத்தால் திலீப்பின் இமேஜ் சரிந்திருக்கிறது. இதனால் படத்துக்கு ஓபனிங் இருக்குமா என்பது சந்தேகம். அதனால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வாய்ப்பிருக்கிறது’ என படக்குழு தெரிவித்துள்ளது. இதே போல அவர் நடிக்கும் ’புரொபஷர் தின்கன்’ படம் பாதி முடிவடைந்த நிலையில் இருக்கிறது. கைது காரணமாக இதன் படப்பிடிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல, கம்மார சம்பவம் என்ற படம் அடுத்த மாதம் வெளியாக இருந்தது. அதற்கும் சிக்கல். இதே போல அடுத்தடுத்த மாதங்களில் ஐந்து படங்கள் அவர் நடிப்பில் உருவாக தயாராக இருந்தது. இந்த கைது காரணமாக அந்தப் படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, மலையாள சினிமாவில் கூறப்படுகிறது. இதனால் திலீப்பை
வைத்து தயாரித்த, தயாரிக்க இருந்த தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்