Published : 06,Nov 2020 05:37 PM

இதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோலியை சீண்டிய இங்கிலாந்து... கொதித்த ரசிகர்கள்..!

ENGLAND-TROLL-KOHLI-ON-HIS-BIRTHDAY-BY-SHARING-A-DISMISSAL-VIDEO

கிரிக்கெட் உலகின் ‘கிங்’ என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை ரசிகர்கள் சொல்வது உண்டு. 

image

அதற்கு காரணம் அவரது அபாரமான பேட்டிங் திறன். 

ஒருநாள், டெஸ்ட் என அனைத்திலும் உலகின் டாப் பேட்ஸ்மேன்களில் கோலியும் ஒருவர்.

அவருக்கு நேற்று பிறந்தநாள். உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்து மழை பொழிந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகமும் கோலிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தது. 

இருப்பினும் அது ஏனோ கிண்டலடிக்கும் விதமாக இருந்தது. 

2018இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் கோலி 71 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீதின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி இருப்பார். 

அந்த வீடியோவை நேற்று பகிர்ந்து ‘இந்த நூற்றாண்டின் சிறந்த பந்தை கோலிக்கு வீசி போல்ட் செய்துள்ளார் ரஷீத்’ என கேப்ஷன் போட்டதோடு அதற்கு கீழே ஹேப்பி பர்த் டே விராட் கோலி என தெரிவித்துள்ளது. 

image

இந்நிலையில் இது இப்போது தேவை தானா? என்றும், கோலியின் தனித்திறனுக்கு மரியாதை கொடுங்கள் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். 

‘பிராட் பிறந்தநாளுக்கு மறக்காமல் யுவராஜ் அடித்த அந்த ஆறு சிக்ஸர் வீடியோவை போடுங்கள்’ என ரசிகர் ஒருவர் இங்கிலாந்து வாரியத்துக்கு பதில் அளித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்