Published : 01,Nov 2020 11:57 AM
விசாகப்பட்டினம்: நடுரோட்டில் 17 வயது சிறுமி கொலை

காதலை நிராகரித்ததால் 17 வயது சிறுமி நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்துவரும் வரலட்சுமி என்ற 17 வயது சிறுமியை அனில் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று கஜுவாக்கா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த வரலட்சுமியை மறித்து காதலை ஏற்றுக் கொள்ளுமாறு அனில் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு வரலட்சுமி மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருமிருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அனில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வரலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். பலத்த காயமடைந்து சரிந்து விழுந்த வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கொலையாளி அனிலை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.