Published : 25,Oct 2020 07:19 AM

தேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்

Kings-XI-Punjab-Bowlers-Defend-Lowest-Total-To-Pull-Off-Thrilling-Win-Over-SunRisers-Hyderabad

துபாயில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தலாம் என்ற காரணத்தினால் இரு அணிகளும் வெற்றி பெற போட்டா போட்டி போட்டன.

image

மயங்க் அகர்வால் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக மந்தீப் சிங் விளையாடினார். கே.எல்.ராகுலும் - மயங்க் அகர்வாலும் இந்த சீசனில் பஞ்சாப்பிற்காக சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்த நிலையில் மயங்க் ஆடாதது பஞ்சாப்பிற்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுலும் - மந்தீப் சிங்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 29 பந்துகளில் 37 ரன்களை குவித்தனர். ஹைதராபாத் அணியின் சந்தீப் ஷர்மா வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் மிட் விக்கெட் திசையில் பெரிய சிக்சர் அடிக்க முயன்று ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார் மந்தீப் சிங்.

image

அதனையடுத்து UNIVERSAL பாஸான கிறிஸ் கெயில் கிரீஸுக்குள் வந்தார். அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் இருபது ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார்.  மறுபக்கம் இன் ஃபார்ம் பேட்ஸ்மேனும், இந்த சீசனின் லீடிங் ரன் ஸ்கோரருமான கே.எல்.ராகுல் 27 ரன்கள் எடுத்த நிலையில், ரஷீத் கானின் மாயாஜால கூக்லி மிடில் ஸ்டெம்ப்பை தகர்த்ததால் வெளியேறினார்.

பேட்ஸ்மேன்கள் நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைக்காததால் ரன் சேர்க்க தடுமாறியது பஞ்சாப்.  மேக்ஸ்வெல்லின் மோசமான ஃபார்ம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.  தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஷ்வின் மாதிரியான பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப நிக்கோலஸ் பூரன் மட்டும் ஆறுதல் கொடுக்கும் வகையில் பஞ்சாப்பிற்காக விளையாடினார். 28 பந்துகளில் 32 ரன்களை குவித்த அவர் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக கிரீஸில் இருந்தார்.

image

அதனால் இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை பஞ்சாப் எடுத்தது.  ஹைதராபாத் அணிக்காக ரஷீத் கான், ஹோல்டர், சந்தீப் ஷர்மா என மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதில் ரஷீத் கே.எல். ராகுலையும், ஹோல்டர் கெயிலையும் வெளியேற்றினர்.

இதனையடுத்து ஹைதராபாத் அணி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சின்ன டார்கெட்டை விரட்டியது.  ஹைதராபாத் அணியின் ஓப்பனர்கள் பேர்ஸ்டோவும், வார்னரும் சர்வதேச கிரிக்கெட்டின் டேஞ்சரஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். அந்த காரணத்தினால் பவர் பிளே ஓவர் முடிவு வரை விக்கெட் ஏதும் இழக்காமல் 52 ரன்களை குவித்திருந்தது ஹைதராபாத்.

image

எப்படியும் ஹைதராபாத் COMFORTABLE வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்த்த நிலையில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார் பஞ்சாப்பின் இளம் வீரர் ரவி பிஷோனி.  அவுட்சைட் ஆப் ஸ்டெம்புக்கு சற்று வெளியே வந்த பந்தை ஸ்வீப் ஆட முயன்று அதை மிஸ் செய்தார். இருப்பினும் அந்த பந்து வார்னரின் கிளவுஸில் பட்டதால் 35 ரன்களில் வெளியேறினார். வார்னர் பஞ்சாப்பின் DRS ரிவியூவில் அவுட்டாகி இருந்தார்.


முருகன் அஷ்வின் வீசிய அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவும் ஸ்வீப் ஆட முயன்று ஸ்டெம்பை மிஸ் செய்து வெளியேறினார். அதற்கடுத்து ஷமி வீசிய ஒன்பதாவது ஓவரில் மிட் ஆப் திசையில் பவுண்டரி அடிக்க முயன்று அப்துல் சமாத் வெளியேறினார். இன்னர் சர்கிளில் நின்று கொண்டிருந்த ஜோர்டான் சரியான டைமிங்கில் எடுத்த ஜம்பினால் அவுட்டானார். பின்னர் மணீஷ் பாண்டேவும், விஜய் ஷங்கரும் பஞ்சாப் பவுலர்கள் வீசிய பந்தை தட்டி தட்டி விளையாடினர்.

image

இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள போட்டா போட்டி போட்டன. இருப்பினும் அணியை வெற்றி கேட்டுக்கு அருகே எடுத்து சென்றவர்கள் அந்த டாஸ்க்கில் தவறிவிட்டனர்.

மணீஷ் 29 பந்துகளில் வெறும் 15 ரன்களை எடுத்து அவுட்டானார்.  அதற்கடுத்த ஓவரிலேயே விஜய் ஷங்கரும் 26 ரன்களில் அவுட்டானார். மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ஹோல்டர், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, கார்க் என ஆட்டத்தின் கடைசி 23 பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை காலி செய்தது பஞ்சாப்.

image

19.5 ஓவர்கள் முடிவில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 19வது ஓவரில் ஜோடார்ன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை பஞ்சாப்பிற்காக ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது பஞ்சாப். தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியில் முன்னோக்கி வருகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்