Published : 21,Oct 2020 12:20 PM

'வேட்புமனுவில் இருப்பது அவரது மனைவி பெயர் அல்ல’ - சர்ச்சையை கிளப்பிய பாஜக வேட்பாளர்

BJP-candidate-created-controversy-in-MP-Anuppur-by-election

மத்திய பிரதேசம் அணுப்பூரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பாக பிசாஹூ லால் சாஹூவும், காங்கிரஸ் சார்பாக விஸ்வநாத் சிங்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, ’’விஷ்வநாத் சிங் தன்னுடன் வசித்துவரும் பெண்ணின் பெயரைத்தான் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது முதல் மனைவியின் பெயரை அல்ல; முதல் மனைவி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடியுங்கள்; தற்போது தன்னுடன் இருப்பவர் இரண்டாவது மனைவி என அவர் குறிப்பிடவில்லை’’ என்று சாஹூ கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த விஷ்வநாத் சிங், தன்னுடன் வசிக்கும் பெண்ணை 15 வருடங்களுக்கு முன்பே தான் திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்கும் 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியதுடன், சாஹூ மீது அவதூறு வழக்குத் தொடரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் இடைத்தேர்தலுக்கு முன்பே சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்