[X] Close

750 கோடி மதிப்பிலான ஓவியங்கள் திருட்டு: ஏர் இந்தியாவுக்கு மேலும் சிக்கல்!

Air-India--Paintings-worth-Rs-750-cr-stolen-now-available-in-black-market

ஏர் இந்தியாவின் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் திருடுபோய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான, 'ஏர் இந்தியா' ஏற்கனவே மலையளவு கடன் சுமையுடன் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதுவரை 52,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது. அரசு நிதி உதவி அளித்தும் கடன் சுமையில் இருந்து அந்த நிறுவனத்தால் மீளமுடியவில்லை. இதையடுத்து, ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், ஏர் இந்தியாவிற்கு சொந்தமான, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான ஓவியங்கள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.


Advertisement

இது குறித்து ஏர் - இந்தியா ஊழியர்கள் சிலர் தெரிவித்ததில், ”மும்பை உட்பட, பல்வேறு நகரங்களில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்களில் பழமையான பல ஓவியங்கள் உள்ளன. பிரபல ஓவியர் ஜதின் தாஸ், தன்னுடைய ஓவியங்கள் சிலவற்றின் மாதிரிகளை, தனிப்பட்ட முறையில் ஒளிப்படம் (ஃபோட்டோ) எடுப்பதற்காக, ஏர் இந்தியா நிர்வாகத்தை அணுகினார். அவர் வரைந்த புகழ் பெற்ற ஓவியங்களில் பலவும் ஏர் இந்தியா நிர்வாகத்தின் வசம் இல்லை என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, நடந்த சோதனையில் 3,500 ஓவியங்கள் காணாமல் போயிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஓவியங்களின் மதிப்பு, 750 கோடி ரூபாய்” என்கின்றனர்.

அர்ப்பணா கவுர், அஞ்சோலி எலா மேனன், பி பிரபா, ஜதின் தாஸ், கே ஏ அரா, எம்.எஃப் ஹுசைன், வி எஸ் கைடோண்டே ஆகியோரது படைப்புகள் ஏர் இந்தியா அலுவலத்தின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Tags : air indiastolen paintingsjatin dasm f hussain
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close