கல்லூரி மாணவியை கடத்தி ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மும்பையில் உள்ளது சார்கோப் பகுதி. இங்குள்ள 5வது செக்டரில் வசித்து வருபவர் சுமா (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). வயது 20. மாணவியான இவர், நேற்று வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகே வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று நின்றது. காரில் 3 பேர் இருந்தனர். கண்ணிமைக்கும்
நேரத்தில் சுமாவை காருக்குள் இழுத்துப் போட்டு வேகமாக காரை ஓட்டினர்.
பின்னர் ஓடும் காரில் மாறி மாறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். சுமா, தன்னை விட்டுவிடுமாறு கதறினார். கார் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் அவரின் கதறல் வெளியே கேட்கவில்லை. பின்னர் காரியம் முடிந்ததும் அவரை வெளியே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சார்கோப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் சுமா. போலீசார் அந்தப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா உதவியோடு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்