Published : 01,Oct 2020 04:23 PM
மகனோடு மரக்கன்றை நட்ட பிரகாஷ் ராஜ்: கிரீன் இந்தியா சவாலுக்கு சூர்யா, த்ரிஷாவுக்கு அழைப்பு!

கொரோனா ஊரடங்கில் ஷூட்டிங் இல்லாததால் நடிகர்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்தனர். தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு அவரது பிறந்தநாளையொட்டி மரக்கன்றை நட்டதோடு, நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார்.
அதனை விஜய்யும் ஏற்று தனது வீட்டில் செடி மரக்கன்றை நடும் படங்கள் சமூக வலைதளங்களில் பசுமைக் காட்சிகளாய் வைரலாகின.
Thank you @MPsantoshtrs for this initiative. i have accepted #GreenindiaChallenge
— Prakash Raj (@prakashraaj) October 1, 2020
from @TanikellaBharni Planted 3 saplings.Further I am nominating @Mohanlal@Suriya_offl@rakshitshetty@meramyakrishnan@trishtrashers and everyone of you too ..pls??continue the chain #JustAskingpic.twitter.com/HrCNAvEGve
இந்நிலையில், இன்று நடிகர் பிரகாஷ் ராஜ் கிரீன் இந்தியா சவாலுக்கு நடிகர் மோகன்லால், சூர்யா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை டேக் செய்து அழைத்துள்ளார்.
அதோடு, ராஜ்ய சபா எம்.பி சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்றுக்கொண்ட பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகனோடு தனது பண்ணை வீட்டில் மரக்கன்றை நடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.