இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளின் பலம் பலவீனம் என்ன?
பெங்களூர் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியில் சூப்பர் வரை சென்று தோல்வியைச் சந்தித்துள்ளது மும்பை அணி. அணியின் பேட்டிங்கில் இஷான் கிஷன் மற்றும் பொல்லார்டு ஃபார்மில் உள்ளது அணிக்கு பலம். ரோகித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முந்தைய போட்டியில் சறுக்கலைச் சந்தித்துள்ளது பலவீனமாக பார்க்கப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்திக் பாண்ட்யா மற்றும் க்ரூணல் பாண்ட்யா ஃபார்முக்கு வர திணறி வருகின்றனர். இளம் வீரர் ராகுல் சாஹர் சுழற்பந்து வீச்சின் மூலம் அணிக்கு வலு சேர்த்து வருகிறார். டிகாக் ரன் சேர்க்க தடுமாறி வரும் அதே சூழலில், விக்கெட் கீப்பர் OPTION ஆக கிஷனும் உள்ளதால் ஓபனிங்கில் அதிரடி மன்னன் கிறிஸ் லின் களமிறக்கப்படுவார் என எதிர்பார்ப்படுகிறது.
பஞ்சாப் அணியும் விளையாடிய 3 போட்டிகளில் இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால் பலம் வாய்ந்த தூண்களாக உள்ளனர். மேக்ஸ்வெல் மற்றும் பூரன் கடைசியாக விளையாடிய போட்டியில் ஓரளவு சோபித்துள்ளது பக்கபலம். கருண் நாயர், ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், சர்ஃபராஸ் கான் மத்திய வரிசையில் நம்பிக்கையளிக்கின்றனர்.
பந்து வீச்சில் ஷமி, காட்ரெல் சறுக்கியுள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுப்பது பலமாக உள்ளது. ஃபீல்டிங்கிலும் பஞ்சாப் தனித்துவமாக செயல்பட்டு வருவது, அணியின் பந்து வீச்சாளர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.
இரு அணிகளும் முந்தைய போட்டியில் இமாலய ஸ்கோர்கள் விளாசியும் தோல்வியை தழுவியுள்ளதால், இன்றைய யுத்தத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்