[X] Close

கடத்தப்பட்ட கணவன் - மீட்டு தரக்கோரி திருமணமான பெண் உண்ணாவிரதம்

தமிழ்நாடு

Abducted-husband-married-woman-fasting-demanding-ransom

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, உறவினர்களால் கடத்தப்பட்ட கணவனை மீட்டு தரக்கோரி திருமணமான பெண் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

image

‘அனுராக் அப்படிப்பட்டவர் அல்ல..’ அடித்துக்கூறும் டாப்ஸி!


Advertisement

வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த சுமதியும், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், மலேசியாவில் வேலை செய்து வந்த செல்வகுமார் கடந்த 16-ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். இதனிடையே அடுத்த நாள் செல்வகுமாரும் சுமதியும் திருமணம் செய்துள்ளனர். 

image

இதற்கு செல்வகுமாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிராம பஞ்சாயத்தில் இருவருக்கும் 18-ஆம் தேதி  வேதாரண்யத்தில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி 18 ஆம் தேதி வேதாரண்யத்தில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்காக வந்த செல்வகுமாரை அவருடைய உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து சுமதி, வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையததில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது கணவனை மீட்டுத்தரக் கோரி உறவினர்களுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு சுமதி உண்ணாவிரதம் இருந்தார். தகவலறிந்த வந்த காவல்துறையினர் செல்வகுமாரை மீட்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி அளித்ததைத்தொடர்ந்து சுமதி போராட்டத்தைக் கைவிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close