[X] Close

ஐபிஎல் : ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் யார்?

விளையாட்டு

WhICH-BATSMAN-HAS-hit-the-most-sixes-in-a-IPL-MATCH

மாடர்ன் டே கிரிக்கெட் என்றாலே பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் தான். 


Advertisement

image

பவர்பிளே, ஃப்ரீ ஹிட், ஒன் பவுன்சர் பெர் ஓவர் (டி20) என ஏகப்பட்ட விதிகள் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக உள்ளன. அதனால், எந்தவித அச்சமுமின்றி பேட்ஸ்மேன்கள் கெத்து காட்டுவதும் உண்டு.


Advertisement

அதிலும் ஐபிஎல் தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். சிக்ஸர்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது. கடந்த 2019 சீசனில் மட்டும் 784 சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் அடித்துள்ளனர்.

image

ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மரண அடி மாவீரர் கிறிஸ் கெய்ல். 


Advertisement

கடந்த 2013இல் பூனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடிய கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்களை குவித்திருப்பார். அதில் மொத்தமாக 17 சிக்ஸர்களும் அடங்கும். 

image

இதுவரை அது ஐபிஎல் தொடரின் சாதனையாகவும் அதுதான் உள்ளது. அதை உடைக்க கெய்லால் மட்டுமே முடியும் என பல கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close