ஜெர்மன் நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் டோனி லெஸ்னர் உள்ளூரில் தற்போது நடைபெற்று வரும் ஜெர்மன் கோப்பைக்கான தொடரில் ஹாம்பர்க் அணிக்காக தடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பார்வையாளர்கள் போட்டியை காண இந்த தொடரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டைனோமோ அணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் டோனியின் அணி தோல்வியை தழுவியது.
ஆட்டம் முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து அவர் ஊடகத்திடம் விவரித்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென ஆவேசம் அடைந்து கேலரிக்குள் புகுந்து டைனமோ அணியின் ரசிகர்களுடன் மோதலில் இறங்கினார். பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் இருதரப்புக்கும் இடையிலான மோதலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
‘போட்டி முடிந்த பிறகு என்னை வார்த்தை ரீதியாக கேலரியில் இருந்தவர்கள் கடுமையாக சாடினர். கால்பந்தாட்ட களத்தில் இது சாதாரண விஷயம் என்றாலும் எனது மனைவியையும், மகளையும் அவர்கள் என் காதுபடவே திட்டியதால் நான் ஆவேசமானேன்’ என இன்ஸ்டாகிராமில் டோனி தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!