ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவரச் சட்டம் தேவையில்லை, எங்களுக்கு நிரந்தர சட்டமே தேவை என்று அலங்காநல்லூர் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்காக அவசரச் சட்டத்தினை மத்திய அரசின் ஒப்புதலோடு மாநில அரசு இயற்றியது. இதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான தடை நீங்கியது. மேலும், மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை காலை நடக்கும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அலங்காநல்லூர் பொதுமக்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கை போராடுபவர்களைக் கலைப்பதற்காகவே என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்றும்வரை போராட்டம் தொடரும் என்றும் அலங்காநல்லூரில் போராடி வரும் மக்கள் கூறியுள்ளனர். நாளை நடத்தத் திட்டமிட்டுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்கள் காளைகள் எதுவும் பங்கேற்காது என்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்