ஆன்லைன் மூலம் மணல் விற்பனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஆன்லைன் மூலம் மணல் பெறுவதற்காக 18 ஆயிரத்து 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மணல் லாரிக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், அனைத்து தரப்பினருக்கும் மணல் கிடைக்கவும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் முறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதற்காக, இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது பற்றி லாரி உரிமையாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் மணல் அள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்யத் தொடங்கினர். அதன்படி, முதல் நாளன்று 14 ஆயிரத்து 897 லாரி உரிமையாளர்களும், பொதுமக்கள் சார்பில் 400 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இரண்டாவது நாளன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதால் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி