[X] Close

''வெற்றிகரமான ஆணுடன் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பணம் சுரண்டுபவர் அல்ல'' - டாப்ஸி

சினிமா

E--very-woman-who-is-with-relatively-more-successful-man-is-not-a-gold-digger-----Taapsee-Pannu

சுஷாந்த் சிங்கின் மறைவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியை ‘கோல்டு டிக்கர்’ என குறிப்பிட்டு வருகின்றனர். இதுபற்றி நடிகை டாப்ஸி பன்னு பேசுகையில், ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுடன் இருக்கும் பெண்ணும் பணம் சுரண்டுபவர் அல்ல எனக் கூறியுள்ளார்.


Advertisement

ரியா சக்ரவர்த்தியால்தான் தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக சுஷாந்தின் குடும்பம் குற்றம்சாட்டியது. அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பணம் பறிப்பவர், சந்தர்ப்பவாதி என்று ரியாவை வெறுத்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.

ரியாவை மனரீதியாக துன்புறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிவீட் செய்துள்ளார் டாப்ஸி. அதில் பெண்களை பணம் சுரண்டுபவர் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது அல்ல. தன்னை விட தன்னுடன் இருக்கும் ஆண் வெற்றியாளராக இருக்கும்போது அந்த பெண் பணம் சுரண்டுபவளாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது. உண்மை என்னவென்று விசாரணையில் தெரியவரும். இதுவரை சுஷாந்தின் பணத்தை ரியா திருடியுள்ளார் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை என்று செய்தித்தாள்களின் சில புகைப்பட ஆதாரங்களையும் சேர்த்துள்ளார்.


Advertisement

இதற்குமுன்பே, ’’எனக்கு சுஷாந்தையும், ரியாவையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் சட்டத்தை அவரவர் கையில் எடுத்துக்கொண்டு ஒரு தனிமனிதனைக் குற்றப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். இறந்தவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக சட்டத்தை நம்புங்கள்’’ என ஊடகங்கள்மீது கடுமையான கோபத்தைக் காட்டி டிவீட் செய்துள்ளார் டாப்ஸி.

லக்ஷ்மி மஞ்சு, வித்யா பாலன், ஷிபானி தண்டேகர் ஆகியோரும் ரியாவை இவ்வாறு நியாயமற்ற முறையில் நடத்துவது தவறு என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியா டுடேவிற்கு ஷிபானி அளித்த பேட்டியில், ’’எனக்கு12 ஆண்டுகளாக ரியாவைத் தெரிவும். அவரை பணம் சுரண்டுபவர் என ஏன் மக்கள் அழைக்கிறார்கள்? அவர் திருடியதாகக் கூறப்படும் 15 கோடி எங்கே என யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஒருவரைக் குற்றப்படுத்த எப்படிவேண்டுமானாலும் பேசலாம். ஒரு பணக்காரருடன் இருந்தாலே பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் என்று கூறுவது சரியல்ல’’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close