Published : 31,Aug 2020 04:15 PM

குளிரூட்டப்பட்ட இறைச்சியால் உடலுக்கு என்னென்ன தீங்குகள்?

Refrigerated-food-spoilage-and-health-hazards-of-eating

ஊரடங்குக் காரணமாக நிறையப் பேர் இறைச்சி வகைகளை முன்கூட்டியே வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்கின்றனர். இதை இரண்டு, மூன்று நாட்கள் வைத்து சமைத்துச் சாப்பிடுகின்றனர். சிலர் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி வந்து சமைக்கின்றனர். அவை எவ்வளவு நாட்களுக்கு முன்பு பேக் செய்யப்பட்டது என தெரியாது. ஆனால் இதுபோன்ற குளிரூட்டப்பட்ட இறைச்சிகள் உடலுக்கு நல்லதல்ல என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி கெடுதல் என்பது ஒரு வளர்சிதை மாற்ற செயல்முறை. தேவையான நீர் கிடைக்கும் தன்மை, குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவற்றால் இறைச்சி கெட்டுப்போகிறது.

குளிரூட்டப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது ஊட்டச்சத்து குறைந்துவிடும். மேலும் மூன்று நாட்களுக்கு மேல் வைக்கும்போது ஃபுட் பாய்ஸன் ஏற்படும் மற்றும் அஜீரணம் போன்ற வேறு பிரச்னைகளும் உருவாகும்.

image

இதுதவிர குளிரூட்டும்போது அவற்றின் நிறம், சுவை மற்றும் தன்மை என அனைத்துமே மாறிவிடும்.

இறைச்சியை வாங்கும்போது அதை சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவேண்டும். ஃப்ரிட்ஜில் வைப்பதற்குமுன்பு நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது புரத உணவுகள் எளிதில் கெட்டுப்போகும் தன்மையைக் கொண்டுள்ளன. எனவே பால், முட்டை, இறைச்சி மற்றும் சீஸ் போன்ற அனைத்து புரத உணவுகளையுமே முடிந்தவரை ஃப்ரீஸரில் வைத்திருக்கவேண்டும்.

இதனால் உணவின் தன்மை மாறாமலும், ஊட்டச்சத்து அதிக அளவில் குறையாமலும் இருக்கும். மேலும் உணவை வைக்கும்போது சரியான வெப்பநிலையை வைக்கவும். இறைச்சியைப் பொறுத்தவரை 4-5 டிகிரி செல்ஷியஸில் வைக்கவேண்டும்.

சமைத்த உணவுகளை அப்படியே சூடான வைக்கக்கூடாது. நன்கு ஆறியபின்புதான் ஸ்டோர் செய்யவேண்டும். இறைச்சியை வைக்கும்போது அதிக கவனம் தேவை. அதிக நாட்கள் வைக்கும்போது உணவில் சால்மோனெல்லா, ஈ-கோலை மற்றும் போட்லினம் போன்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும். இதனால் உணவே விஷமாக மாறி, பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

image

உணவு கெட்டுப்போதல்

இறைச்சி போன்ற உணவுகளை எப்போதும் ஃப்ரிட்ஜின் மேல்தட்டில்தான் வைக்கவேண்டும். இதிலிருந்து வெளிவரும் நீர் கீழே வைத்துள்ள உணவுகளின்மீது விழுந்து மாசுபடுத்தும். மேலும் குளிர்சாதனப் பெட்டியில் போதுமான காற்றோட்ட வசதி இருக்காது. இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம்.

குளிர்சாதனப் பெட்டி வெப்பநிலை

குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையை சரிபார்க்கத் தெரியாதவராக இருந்தால், கட்டாயம் குளிரூட்டப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சுமார் 32 டிகிடி பாரன்ஹீட் வெப்பத்தில் செழித்துவளரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வெப்பநிலைக்கு மேல் குறைந்தது 40 டிகிரி இருக்கவேண்டும். கதவை திறந்து சிலநேரம் நிற்பதுகூட வெப்பநிலையைக் குறைக்கிறது மற்றும் கிருமிகள் உள்ளே நுழைய வழிவகுக்கிறது. இந்த உணவை உட்கொள்ளும்போது நீண்டகால ஆரோக்க்கிய கேடுக்கு வழிவகுக்கும்.

image

அழுக்கான குளிர்சாதனப்பெட்டி

பிஸியான வாழ்க்கை சக்கரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தங்கள் குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய நேரம் இருக்காது. இதனால் கரப்பான் பூச்சி, ஈக்கள், கொசு போன்ற பிற பூச்சிகள் அழுக்கான குளிர்சாதனப் பெட்டிக்குள் எளிதாக செல்லும். கதவை மூடியபிறகு உள்ளே என்ன இருக்கிறது என யாருக்கும் தெரியாது. அசுத்தமான உணவை உட்கொள்வது வாயு, வயிற்றுவலி, தொற்று, வயிற்றுப்போக்கு அல்லது ஃபுட் பாய்ஸனை ஏற்படுத்தும்.

மின்வெட்டு

நம் ஊரில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் குளிர்சாதனப்பெட்டியின் வெப்பநிலை மாறும்போது உள்ளே வைத்திருக்கும் உணவுகள், குறிப்பாக இறைச்சி அழுகிப்போய்விடும்.

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்