திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே விபத்து நடந்ததை காரணம் காட்டி பணம் பறிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் ஆங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இசுக்கழி காட்டேரி அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் இறந்தார். இது தொடர்பாக வெறையூர் காவல்நிலையத்தில் வழக்கு உள்ள நிலையில், இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட சிலர் இந்த விபத்தை வைத்து பணம் பறிக்கும் நோக்கத்தோடு விபத்துக்கு காரணமாக சொல்லப்படும் அன்பழகனின் அண்ணனான பஞ்சமூர்த்தியிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென்று கடந்த 20 ஆம் தேதி பஞ்சமூர்த்தியையும் அவரது உறவினரான முத்துவேலையும் பழனி, இசுக்கழி காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாகண்ணு மற்றும் மூர்த்தி ஆகியோர் கடத்திச் சென்று 6 லட்சம் கேட்டு மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பஞ்சமூர்த்தி வேட்டவலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide