Published : 29,Aug 2020 06:15 PM

9ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு கொரியரில் வந்த கஞ்சா – அதிர்ச்சியடைந்த தந்தை..!

Bengaluru-businessman-opens-courier-addressed-to-minor-son--finds-ganja

பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகனுக்கு வந்த கொரியரை எதேச்சையாக பிரித்துபார்த்த தந்தை அந்த கொரியரில் கஞ்சா இருந்ததை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் உள்ள சதாசிவநகரில் நடந்துள்ளது.

image

பெங்களூரு சதாசிவ நகர் பிஎம்வி இணைப்பில் உள்ள 45 வயது தொழிலதிபரின் வீட்டுக்கு, அவரது 9 வகுப்பு படிக்கும் மகனின் பெயருக்கு கொரியர் ஒன்று வந்துள்ளது. மகன் விளையாடிக்கொண்டிருந்ததால் கொரியரை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் அடர்பழுப்பு நிறத்திலான பொடி இருந்துள்ளது. இதுபற்றி நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் இது கஞ்சா பொடி என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு அதிர்ச்சியுடன் இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றம்னர

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்