Published : 22,Aug 2020 04:11 PM

ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடும் போட்டிகள் என்னென்ன?: கங்குலி கடிதம்

India-to-host-England-in-February-2021-followed-by-IPL-14-in-April

இப்போதோ அப்போதோ என இழுத்துக் கொண்டிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒருவழியாக செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி என்னென்ன கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

image

பிசிசிஐ நிர்வாகிகளுக்கு சவுரவ் கங்குலி எழுதியுள்ள கடிதம் குறித்து "மும்பை மிரர்" செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதில் "ஐபிஎல் முடித்த பின்பு இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதன்பின்பு நாடு திரும்பும் இந்திய வீரர்கள் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்"

image

மேலும் "உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இப்போது சீசன் இல்லை. அதனை தொடங்குவதற்கான நேரமும் இப்போது இல்லை. சூழல் அனுமதி தந்தப் பின்பே உள்ளூர் கிரிக்கெட் குறித்து யோசிக்க முடியும். உள்ளூர் போட்டிகளுக்கு முன்பு வீரர்களின் பாதுகாப்பையும் உடல்நலத்தையும் உறுதிச் செய்ய வேண்டும். உள்ளூர் போட்டிகளை தொடங்குவதற்கான சாதகமான அம்சங்களை பிசிசிஐ பரிசீலிக்கும்" என தெரிவித்துள்ளார் சவுரவ் கங்குலி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்