[X] Close

உதவாத உறவினர்கள், அதிகாரிகள்: இறந்தவரின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்

இந்தியா

Covid-scare-keeps-people-away-body-taken-for-burial-on-bicycle
கொரோனா பீதியால் இறுதிச் சடங்கிற்கு உறவினர்கள் வராததால், இறந்த தந்தையின் உடலை சைக்கிளில் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.
 
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஹூப்பள்ளி பகுதி காந்திநகரை சேர்ந்த 71 வயதான முதியவர் கொரோனா பாதிப்புடன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா பரிசோதனை செய்யாத நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் வைத்து உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்தனர்.
 
ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. கொரோனா உறுதிபடுத்தப்படாததால், சுகாதாரத்துறை ஊழியர்களும் அடக்கம் செய்ய முன்வரவில்லை. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் உறவினர்களும் வரவில்லை.
 
image
 
எனவே வேறு வழியில்லாமல், இறந்தவரின் மகனும் மருமகனும் உடலை பிளாஸ்டிக் கவரால் சுற்றி, கிராம பஞ்சாயத்து வழங்கிய பிபிஇ கிட் அணிந்து கொண்டு, கொட்டும் மழையில் சைக்கிளில் சடலத்தை வைத்து கொண்டு மயானத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்துள்ளனர். இது குறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. 
 

Advertisement

Advertisement
[X] Close