[X] Close

கோலிக்கு பாடம் கற்பிக்கணுமாம்.. பயிற்சியாளராக விண்ணப்பித்த மெக்கானிக்கல் எஞ்சினியர்

Mechanical-engineer-applies-for-team-India-head-coach-post

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.


Advertisement

மேற்குவங்க மாநிலத்தின் புர்த்வான் மாவட்டத்தைச் சேந்த உபேந்திரநாத் பிரமச்சாரி என்பவர், அந்த பகுதியிலுள்ள கட்டடம் கட்டும் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்கல் எஞ்சினியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததை அடுத்து பயிற்சியாளார் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ இணையதளம் மூலமாக அந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ள உபேந்திரநாத், கும்ப்ளே போன்ற சிறந்த வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதை வீராத் கோலி விரும்பவில்லை. விராத் கோலிக்கு பாடம் கற்பிக்கவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விராத் கோலியைத் தன்னால் மெல்லமெல்ல சரியான வழிக்குக் கொண்டுவர முடியும் என்றும் உபேந்திரநாத், தனது சுயவிவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close