[X] Close

உடல் எடையைக் குறைக்கும் மெனு: எதிர்ப்பால் மன்னிப்புக்கேட்ட சீன ஹோட்டல்!

உலகம்

Weight-Loss-Menu---Hotel-apologized-for-the-protest-

‘சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஒரு உணவகத்தில்  சாப்பிடுவதற்கு முன்பு எடையை பரிசோதித்துக்கொள்ளவேண்டும். எடை அதிகமாக இருப்பவர்கள் அதற்கேற்ற கலோரி குறைவான  உணவை சாப்பிடவேண்டும்’ என்று அறிவுறுத்தியதோடு மெனுவிலும் உடல் குறைப்பு உணவுகளை குறிப்பிட்டிருந்தது.

image

கேட்பதற்கு ஆரோக்கியமான திட்டம்போல் இருந்தாலும் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் உணவு விலைகள் உயர்ந்ததால் பிரதமர் ஜி ஜிங்பிங்  உணவுகளை வீணாக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இதன், அடிப்படையிலேயே, இந்த ஹோட்டல் இம்முடிவை எடுத்துள்ளது.


Advertisement

image

இதனைக் கண்டித்து சீன சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ஹேஷ்டேக்குகள்  உருவாகின. 300 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளார்கள். அதற்குத்தான், இவ்வளவு எதிர்ப்புகள்.

சீன உணவகம் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி அறிவித்தோம். யாரையும் எடை பரிசோதிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்று விளக்கமளித்தது.

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close