[X] Close

எல்லை மீறியது இந்தியாதான்: சீனா பகீர் புகார்

China-says-India-crossed--the-border-limit

சிக்கிம் எல்லையில், இந்திய ராணுவம்தான் அத்துமீறி நடந்துகொண்டது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, 2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இந்திய ராணுவத்தினர் மனித சுவராக நின்று அவர்களைத் தடுத்துள்ளனர். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவம்தான் எல்லையை தாண்டியது என சீன ராணுவம் குற்றம் சாட்டிஉள்ளது. இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செங் ஜாங் கூறும்போது, சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவம்தான் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, தன்னுடைய ராணுவத்தை எல்லையில் திரும்ப பெற வேண்டும் எனவும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close