[X] Close

வாசலுக்கு வந்து மோடியை வரவேற்ற டிரம்ப்!

Trump-welcomes-Modi

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து இருநாடுகள் உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


Advertisement

வெள்ளை மாளிக்கைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் வெள்ளை மாளிகையின் தெற்கு முற்றத்திற்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மோடியை டிரம்ப் வரவேற்ற போது இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பின்னர் வெள்ளை மாளிகையின் ஓவல் அறையில் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். இது தமக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட மரியாதை அல்ல என்றும் 125 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என மோடி குறிப்பிட்டார். 

சிறந்த பிரதமராக விளங்கும் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்வதாக கூறிய டிரம்ப், பிரதமர் மோடி பொருளாதார ரீதியாக் மிகச் சிறப்பாக செயலாற்றி இருப்பதாகவும், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாவும் பாராட்டுத் தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களும் பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறையில் கூட்டு, சர்வதேச ஒத்துழைப்பு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருதலைவர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டதாக தெரிகிறது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close