நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பது கிட்டதட்ட உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் வெளியீட்டுக்காக தற்போது காத்திருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய அடுத்த படமான தளபதி 65 பற்றிய எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் "தளபதி 65" படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஏற்கெனவே துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த மார்ச் மாதம் விஜய்யை சந்தித்து முருகதாஸ் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு வரி கதையை மட்டுமே விஜயிடம் அவர் கூறினார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது முழு கதையும் தயாராக இருப்பதால் ஏ. ஆர். முருகதாஸ் விரைவில் விஜய் நேரில் சந்தித்து முழுக் கதையையும் அவரிடம் சொல்ல உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது வரை தளபதி 65 படத்தில் இசையமைப்பாளர் தமன் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கிறார். படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்