Published : 06,Aug 2020 11:06 AM

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. கள்ளக்குறிச்சி அருகே சோகம்!

love-couple-commit-suicide-in-kallakkurichi

கள்ளக்குறிச்சி அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் பாஸ் என்ற குமார். நயினார்பாளையம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கவிதா. இருவரும் காட்டுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். படிக்கும்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.

Suicide News in Tamil, Latest Suicide news, photos, videos | Zee ...

இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள ஈரியூர் காட்டு கோட்டை அருகே வனப்பகுதியில் உள்ள அருஞ்சோலை அம்மன் கோயில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்