சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை : பின்னனி என்ன?

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை : பின்னனி என்ன?
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை : பின்னனி என்ன?

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்திய வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், பீர்மேட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2012ல் மர்மமான முறையில் மரணமடைந்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர் போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பெரம்பலூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு பின்னர் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் இறந்து விட்டதால், மற்ற ஆறு பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 42 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரும், அவரது நண்பர் ஜெய்சங்கரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com