Published : 24,Jun 2017 07:46 AM

சினிமாவில் நிலைத்து நிற்பது எப்படி? மகளுக்கு ஸ்ரீதேவி அட்வைஸ்!

Sridevi-s-advices-to-Daughter-Jhanvi--to-work-hard-in-cinema-field

சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கடின உழைப்பு அவசியம் என்று மகளுக்கு அறிவுரை கூறியிருப்பதாக நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இதில் ஜான்வி சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். ஜான்விக்கு என்ன அறிவுரை கூறினீர்கள் என்று ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, ‘சினிமாவில் கடின உழைப்பு முக்கியம். உழைப்பின்றி ஊதியமில்லை. எப்போதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நடிப்பை வெளிப்படுத்து. அதுதான் நிலைக்கும். நல்ல நடிகை ஆவதற்கு மனிதநேயம் முக்கியம் என்று சொல்லியிருக்கிறேன்’ என்றார். 

ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், ’தான் ஸ்ரீதேவி மீது இன்னும் அதிகமாக காதலில் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதுபற்றி கேட்டபோது, ’அவர் அப்படிச் சொன்னதில் எனக்கு மகிழ்ச்சிதான். நானும் அவர் மீது அதிக காதலில் இருக்கிறேன். ஆரம்பத்தில் எப்படி அவர் மீது காதல் கொண்டிருந்தேனோ, அதே காதலை இப்போதும் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவர் மீதான காதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவர் என் மீது வைத்துள்ள அன்பு, இதுவரை மாறவே இல்லை. அவர் நேர்மையான மனிதர். அவர் எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்’ என்றார் ஸ்ரீதேவி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்