Published : 22,Jul 2020 01:59 PM

திருப்பதியில் ஆகஸ்ட் 5 வரை ஊரடங்கு: எதுவெல்லாம் இயங்கும்?

Lockdown-in-Tirupati-till-August-5

 திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சித்தூர் ஆட்சியர் டாக்டர் நாராயண பாரத் குப்தா, சித்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,400 பேரில் திருப்பதியில் மட்டும் 30 சதவீதம் பேர் இருக்கிறார்கள். வணிக நிறுவனங்கள் நண்பகல் 11 மணி வரை மட்டும் திறந்திருக்கும். மதுக்கடைகள் மற்றும் வங்கிகளும் மூடப்படும்” என்று தெரிவித்தார்.

image

நாள் முழுவதும் மருந்துக் கடைகள் திறந்திருக்கும். இந்த மாத இறுதியில் நிலைமையை கண்காணித்து தளர்வுகள் அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்