Published : 23,Jun 2017 01:09 PM

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து, சாய்னா நேவால் வெளியேற்றம்

Australian-Open--PV-Sindhu--Saina-Nehwal-fails-to-make-into-Semis

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டிகளில், இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனத் தைபேயின் டாய் சு இங்கை எதிர்த்து சிந்து விளையாடினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போட்டியில், முதல் செட்டை 21-10 என சிந்து எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 20-22 என போராடி இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில், சிந்து தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சமாளித்து விளையாடிய சீனத் தைபே வீராங்கனை, 21-16 என அந்த செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல மற்றொரு காலிறுதிப் போட்டியில் சீனாவின் சுன்யூவை எதிர்த்து இந்தியாவின் சாய்னா நேவால் விளையாடினார். முதல் செட்டை 17-21 என்று தோற்ற சாய்னா, இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கில் எளிதில் வென்றார். எனினும் மூன்றாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன வீராங்கனை சுன் யூ, அந்த செட்டை 21-17 என்ற கணக்கில் வென்றார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்