Published : 20,Jul 2020 09:41 PM
இணையதளம் மூலமாக கொரோனா பரிசோதனை முடிவுகள் : திருச்சி மருத்துவமனையில் அறிமுகம்.

கொரோனா பரிசோதனை முடிவுகளை பெற மருத்துவமனைக்கு சென்று அலையாமல், வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலமாக அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள இனி மருத்துவமனைக்கு செல்ல அவசியமில்லை. cv19.microkapv.in என்ற இணையதளத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதள முகவரிக்குள் உள்நுழைந்தால், உங்களுக்கான கொரோனா பரிசோதனை எண் கேட்கப்படுகிறது. இந்த எண்ணை பதிந்தபிறகு உங்களுக்கான தகவல் காட்டுப்படும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.