[X] Close

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38

ISRO-PSLV-C38-Launched

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி38 ராக்கெட் , 31 செயற்கை கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  'கார்ட்டோசாட் - 2' என்ற செயற்கை கோளை வடிவமைத்தது. 712 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை பயன்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுன்டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது.

புவியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 29 செயற்கைகோள்களும், இந்தியாவை சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close