Published : 22,Jun 2017 05:12 AM

ஓ.பி.எஸ். அணியும் பாஜகவுக்கு ஆதரவு

OPS-camp-supports-BJP-candidate-Ramnath-Kovind-in-Presidential-Election

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி ஆதரவளிக்கும் என்று அந்த அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் 12 எம்.எல்.ஏ.க்களும், 12 எம்.பி.க்களும் உள்ளனர். ஏற்கனவே அதிமுக அம்மா அணி பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனாலும் அதிமுகவின் மொத்த வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் உள்ளனர். அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் பனிப்போர் நிலவுகிறது. எனவே அந்த 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எம்.எல்.ஏ.களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைப்பது சந்தேகம்தான் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்