[X] Close

கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா; மூடப்பட்டது முதல் மாடி

தமிழ்நாடு

Corona-for-Covai-collector-office-official

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஆட்சியர் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் மாடி மூடப்பட்டது.


Advertisement

சென்னையிலிருந்து வந்த சிறைத்துறையை சேர்ந்த 50வயதான பெண் நன்னடத்தை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றி வந்த பழைய கட்டடத்தின் முதல் மாடி தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 4 நாட்கள் முன் சாலை மார்க்கமாக சென்னையிலிருந்து வந்துள்ளதை அடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

image


Advertisement

மேலும், சென்னையில் இருந்து விமானம் மூலம் மே 30-ஆம் தேதி கோவை வந்தவர்களில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் 9 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close