Published : 19,Jun 2017 04:42 AM
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூன் 19 காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள். இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு கட்சியின் தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ எனது பிராத்தனைகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.
இதேபோல் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். அரசியல் களத்தில் நேர் எதிர் துருவங்களான ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வது ஆரோக்கியமான அரசியலைக் காட்டுகிறது.