[X] Close

போங்கய்யா நீங்களும் உங்க கணிப்பும்: தவிடு பொடியாக்கியது பாக்.!

Champions-Trophy-Champion-Pakistan-break-the-poll

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் தரவரிசையில் 8வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அந்த அணியும் அதற்கு ஏற்ற மாதிரி, ஏனோ தானோ என்றுதான் ஆடிக்கொண்டிருந்தது. எல்லோர் கண்ணும் இங்கிலாந்து அணி மீதே இருந்தது. அந்த அணியும் இங்கிலாந்தும் தான் பைனலுக்கு வரும் என்று நம்பினர். ஆனால், ’போங்கய்யா நீங்களும் உங்க கணிப்பும்’ என்று எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டு இறுதி போட்டிக்கு வந்தது பாகிஸ்தான். எதிர்பார்க்காமலேயே வெற்றியும் பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டது.


Advertisement

பாதுகாப்பு பிரச்சினையால் பாகிஸ்தானில் சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. இந்த வெற்றி அந்த நாட்டு கிரிக்கெட்டுக்கு தெம்பை தந்திருக்கிறது. பாகிஸ்தான் அணி 1992-ம் ஆண்டில் உலக கோப்பையையும், 2009-ம் ஆண்டில் டி20 உலக கோப்பையையும் வென்றிருந்தது. இப்போது சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் ஐ.சி.சி.யின் மூன்று போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய அணிகளின் வரிசையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

இந்திய அணியில் ஸ்ட்ராங் பேட்ஸ்மேன்கள் இருந்தும் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐ.சி.சி. இறுதிப்போட்டி ஒன்றில் ஓர் அணியின் மோசமான தோல்வி இதுதான். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மோசமாக இருந்தது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close