மழைக்காலம் முடிந்த பிறகே இந்தியா கிரிக்கெட் விளையாட்டைத் தொடங்கும் என பிசிசிஐயின் சிஇஓ ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டு ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கூட்டத்தில் பேசிய ராகுல் ஜோரி, “நாங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்தையும் செய்து வருகிறோம். அதன்படி, மழைக்காலம் முடிந்த பின்னரே இந்தியா கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க முடியும். ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரையில் உலகின் அனைத்து சிறந்த வீரர்களும் பங்கேற்பார்கள். அப்படி நடந்தால் தான் ஐபிஎல் நன்றாக இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நாளையே நிலைமை சரியாகிவிடாது” என்றார்.
அத்துடன், “வெளிநாட்டு வீரர்களை அழைப்பதற்கு அரசிடம் அறிவுரைகள் பெற வேண்டும். தற்போது வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்கவில்லை. எப்போது விமானங்கள் இயக்கப்பட்டாலும், அப்போது வீரர்கள் விளையாடுவதற்கு முன்பாக தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!