[X] Close

இந்திய வம்சாவளி சமையல் கலைஞரை திருமணம் செய்த ஆஸ்திரிய இளவரசி மரணம்

உலகம்

Austrian-Princess--Married-To-Indian-Origin-Chef--Dies-At-31

ஆஸ்திரிய இளவரசி 31 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ஆஸ்திரிய நாட்டு ராஜ வம்சத்தைச் சேர்ந்த தம்பதியினரான மரியா ஹன்னா மற்றும் பியோட்டர் கேலிட்ஸின் ஆகியோரது மகள் மரியா கேலிட்ஸின். இவருக்கு 3 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்கள் உள்ளனர். தாய், தந்தையுடன் வளர்ந்த மரியா கேலிட்ஸின், 4 வயது இருக்கும்போது ஐரோப்பாவிலிருந்து ரஷ்யா சென்றார். பின்னர் அங்கிருந்து கல்லூரி படிப்பிற்காக பெல்ஜியம் சென்றவர், அதன்பின்னர் சிகாகோவில் பணிபுரிந்தார்.

image


Advertisement

அதன்பின் ஹாஸ்டானில் பணிபுரிந்தார். அங்கே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான ரிஷி ரூப் சிங் என்பவருடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடந்து, தற்போது 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் 31 வயதே ஆன மரியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை 5300 டாஸ்மாக் கடைகள் திறப்பு !


Advertisement

Advertisement
[X] Close