Published : 05,May 2020 02:03 PM
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா.. 4 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 8 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இதில் பெருவாரியான நபர்கள் கோயம்பேடு சந்தை மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 550 அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 278 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையில் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் பாதிப்பு 500க்கும் மேல் தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.