[X] Close

இனி பார்சல் ரயில் கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் 

இந்தியா

It-has-been-announced-that-parcel-trains-can-be-paid-online
ஆன்லைன் மூலமாக இனி பார்சல் ரயில் கட்டணம்  செலுத்தலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
image
 
தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் பார்சல் ரயில் சேவைக்கான புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஊடரங்கு மற்றும் சமூக இடைவெளி காரணங்களை மையப்படுத்தும் விதமாக ரயில்வே நிர்வாகம் இந்த எளிய  முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி இனி அலுவலகத்திலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தபடியோ சேவை கட்டண தொகையை ஆன்லைன் மூலமாக எளிதாக செலுத்தலாம்.
 
image
 
பார்சல்கள் ஏற்றிச்செல்ல அனுமதி பெற்றதும் அதற்கான கட்டணதொகையை Net Banking/ RTGS /NEFT/ UPI  மூலமாக செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டணத் தொகை ரயில்வே நிர்வாகத்திற்கு செலுத்தியது உறுதிசெய்யப்பட்டவுடன், வாடிக்கையாளர்களின் பார்சல்கள் அந்தந்த இலக்கிற்கு கொண்டு சேர்க்கப்படும். இந்த ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி, பார்சல் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் வசதியாகும்.
 
மேலும் விவரங்களுக்கு அணுகவேண்டிய அலைபேசி எண்கள்: 9444282223, 8129316480, 9444385240
இமெயில்: srdcm@mas.railnet.gov.in
வலைதள முகவரி: www.srcommercialmas.com

Advertisement

Advertisement
[X] Close