[X] Close

“ஊரடங்கை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்” - ஒடிசா அரசு கோரிக்கை

இந்தியா

Lockdown-need-extend-more-than-one-month---Odisha-govt-request-to-Central

பொது முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் 4வது முறையாக இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் அமலில் உள்ள ஊரடங்கு மே 3ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிப்பு பற்றி மே 3-க்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆலோசனையில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஊரடங்கு தொடரலாம் எனவும், கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

 image

இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பு வேண்டும் என மேலும் சில மாநில அரசுகளும் கோரிக்கை வைத்துள்ளன.

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?


Advertisement

Advertisement
[X] Close